Sevakkaattu Seemai song lyrics
MOVIE/ALBUM | Nenjukku Needhi 2022 |
SONG | Sevakkaattu Seemai |
DIRECTOR | Arunraja Kamaraj |
STARRING | Udhayanithi Stalin |
LYRICS | Yugabharathi |
MUSIC | Dhibu Niran Thomas |
SINGER | Guru Ayyadura. R |
SONG LYRICS IN ENGLISH
Arichandra Raasa...
SONG LYRICS IN TAMIL
அரிச்சந்திர மாமன்னர் ஆட்சியில் நடந்ததென்னவோ
சத்தியமே சோதனையாய் சரிந்து கீழே விழுந்ததென்னவோ
சகத்தோரே உணர்ந்திடுவீர்
சகலரும் வந்து சேரும்
இடுகாட்டு மத்தியிலே இருக்கின்றதோ
ஐயோ எங்கே தேடுவேன்
ஏறாத மலை ஏறி
இறங்காத கடல் இறங்கி
வடிக்காத கண்ணீர் விட்டு
ஓடினேன் தேடினேன் ஓடினேன்
கண்ணே மணியே என்று
உன்னை நாடுவேன்
செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
அரசாண்ட நாட்ட விட்டே
நகர்ந்தாரே செல்லாக் காசா
பொட்டக்காட்டு புழுதி போல
பொக பொகயா போனாரே
எல்லாத்தையும் எழந்த பொறவு
ஈம காட்ட சேந்தாரே
செவக்காட்டு சீமையெல்லாம் ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
பட்டாட குப்பையிலே பல்லக்குமே வீதியிலே
எட்டூரு சுத்தி வந்தோம்
பட்டினிக்கு சோறுயில்ல
கண் போக காட்சியில்லே
கால் போக ஊருமில்ல
மண்ணாகி போன பின்னே
மானிடருக்கு சாதியில்ல
பஞ்சாங்க நூலு தான் பள்ளம் தோண்டுதே
அன்னாடங்காய்ச்சிய குத்தி சாய்க்குதே
கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி
கொட்டுன்னு தானே சொன்னாங்க
கூரைரயுமில்லா வீட்டுல வாழும்
எங்களை எதுக்கு கொன்னாங்க
செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
மும்மாரி பெய்யுதுங்க
மூணு போகம் விளையுதுங்க
ஒப்பாரி வைக்கும் சனம் ஒசர வழி தெரியலைங்க..
முள்ளோடு பூவிருக்கு
முத்தத்துல நெலவிருக்கு
கல்லான கடவுளுக்கே
கருணை அது எங்கிருக்கு
கற்பூரம் ஏத்தியும்
கண்ண காட்டலே
நெய் சோற போட்டுமே
மண்ண காக்கல
பொய்யில உண்ம பொசுங்கி போக
எத்தன சட்டம் அம்மாடி
நீதிய காசுக்கு வாங்குற மனுசன்
நிக்கிறான் பாரு முன்னாடி
செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
அரசாண்ட நாட்ட விட்டே
நகர்ந்தாரே செல்லாக் காசா
பொட்டக்காட்டு புழுதி போல
பொக பொகயா போனாரே
எல்லாத்தையும் எழந்த பொறவு
ஈம காட்ட சேந்தாரே